‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள ஸ்பாட் விசிட் அனுபவம் சொல்கிறார் வையாபுரி மனைவி

XXXX
- Advertisement -

“அவர் டாஸ்க் செய்ய முடியாம கஷ்டப்படுறதைப் பார்த்து நானும் கலங்கியிருக்கேன். வீட்டுக்கு வந்திடணும்னு நினைச்சிருக்கேன். ஆனா, இப்போ என் வீட்டுக்காரரே ரொம்ப உற்சாகமாகி டாஸ்க் செய்ய ஆரம்பிச்சிருக்காரு. அதைவிட, ரெண்டு மாசத்துக்குப் பிறகு அவரை நேரில் சந்திச்சுட்டு வந்த மகிழ்ச்சியில் ஃப்ரீஸ் ஆன மாதிரி இருக்கேன்” எனப் புன்னகைக்கிறார் வையாபுரியின் மனைவி ஆனந்தி. ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் தன் கணவரைச் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டு வந்த தருணங்களைப் பகிர்கிறார்.

Image result for வையாபுரி மனைவி

- Advertisement -

“என் வீட்டுக்காரர் சொல்லிட்டே இருக்கிற, என் அக்கா பொண்ணு காயத்ரியின் கல்யாணம் திங்கள்கிழமை நடந்துச்சு. அதனால், நானும் என் பொண்ணு ஷிவானியும் சனிக்கிழமை நைட்டு திருப்பூருக்குக் கிளம்பினோம். கல்யாண வீட்டுல எல்லோருமே என் வீட்டுக்கார் பற்றித்தான் கேட்டாங்க. அவர் கல்யாணத்துக்கு வரலைங்கிறதை பெரிய குறையா எல்லோரும் ஃபீல் பண்ணினாங்க. ரெண்டு நாள் திருப்பூர்ல தங்கினதால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்க்க முடியலை. அந்தச் சமயம் கல்யாணத்துக்கு வராத என் பையன் ஷ்ரவன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, சில விஷயங்களை போன் மூலமாகச் சொன்னான். ‘அப்பா இந்த வாரம் தலைவராகிட்டார். அதனால், இந்த வாரமும் அவர் வெளியே வர வாய்ப்பில்லை’னு சிரிச்சுகிட்டு சொன்னான். ‘இந்த வாரமும் அவரை நேரில் பார்க்க முடியாதா?’னு மனசுக்கு கஷ்டமாக இருந்துச்சு.

கல்யாண நிகழ்ச்சியை முடிச்சுட்டு, திங்கள்கிழமை ஈவ்னிங் சென்னைக்குக் கிளம்பினேன். ‘நாளைக்கு நீங்க ஷூட்டிங் வரணும்’னு விஜய் டிவியிலிருந்து போனில் சொன்னாங்க. சென்னைக்கு வந்ததும் நானும் பிள்ளைங்களை கூட்டிட்டு ‘பிக் பாஸ்’ நடக்கும் செட்டுக்குப் போனேன். முதல்ல என்னை மட்டும் வீட்டுக்குள்ளே போகச் சொன்னதால், பிள்ளைங்களை விடமாட்டாங்கனு நினைச்சேன். அப்புறமா, அவங்களை கன்ஃபெக்‌ஷன் ரூம் வழியா வீட்டுக்குள்ளே வரவெச்சாங்க” என்கிறார் ஆனந்தி.

இரண்டரை மாசத்துக்குப் பிறகு கணவரைச் சந்தித்த உற்சாகம் முகம் முழுக்க ஜொலிக்க தொடர்கிறார். “போட்டியாளர்களை ஃப்ரீஸ் செய்யும் டாஸ்க் என்பதால், என் வீட்டுக்காரரை ஃப்ரீஸ் பண்ணிட்டாங்க. அந்தச் சமயம் என்னை வீட்டுக்குள்ளே விட்டாங்க. நான் அவர் பக்கம் போனேன். ‘வையா’னு பல முறைச் சொன்னேன். டாஸ்க்ல இருந்தவர், என்னை திரும்பிப் பார்க்கலை. ‘நான் முக்கியமா; டாஸ்க் முக்கியமா?’னு கோபமா கேட்க, டாஸ்கை கைவிட்டுட்டு என்கூடப் பேசினார். ரெண்டரை மாசத்துக்குப் பிறகு பார்க்கிறதால், என்னைக் கட்டிப்பிடிச்சு நெகிழ்ந்தார். நானும் ரொம்பவே ஃபீல் பண்ணினேன். எனக்கு ஸ்வீட் ஊட்டிவிட்டு, நிறைய கேள்வி கேட்டார். வெளியில் நடக்கும் எந்த விஷயத்தைப் பத்தியும் சொல்லக்கூடாதுன்னு நிகழ்ச்சிக்காரங்க சொல்லியிருந்ததால், அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் சமாளிச்சேன். கல்யாணம் பற்றி கேட்டார். ‘நல்லபடியா நடந்துச்சு. எல்லோரும் உங்களை கேட்டாங்க’னு சொன்னேன். அப்புறம் அவர்கூட கொஞ்ச நேரம் பேசின நிலையில, என்னை கிளம்பச் சொல்லிட்டாங்க. அப்புறம் பிள்ளைங்க வீட்டுக்குள்ள வர, மீண்டும் என்னையும் அனுப்பினாங்க.

டாஸ்கை மீறி என்னோடு பேசினதால், டாஸ்கில் ஃபெயில் ஆயிட்டார். அதுக்கு தண்டனையா நானும் பிள்ளைங்களும் அவரை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டோம். கலகலப்பா இருந்துச்சு. அப்புறம், அவருடனும் சக போட்டியாளர்களுடனும் 20 நிமிஷம் சிரிச்சுப் பேசினோம். நான் பாட்டுப் பாடினேன். பிள்ளைங்க டான்ஸ் ஆடினாங்க. போட்டியாளர்கள் எல்லோருமே எங்ககிட்டே அன்பாகப் பேசினாங்க. அங்கே எல்லோருமே வீட்டு உறவினர்களை பிரிஞ்சு வருத்தத்தில் இருக்காங்கனு புரிஞ்சுது. கணவரைப் பார்த்த உற்சாகத்தில் வீட்டுக்குள்ளே இருக்கும் விஷயங்களை பெருசா கவனிக்கலை. ஆனா, பிள்ளைங்க அந்த வீட்டுல கிச்சன், பெட்ரூம், கன்ஃபெக்‌ஷன் ரூம்னு எல்லா ஏரியாவையும் பார்த்துட்டு வந்து அதைப் பற்றி சொன்னாங்க” என்கிற ஆனந்தி, தன் கணவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பற்றியும் சொல்கிறார்.

Related image

“தான் வீட்டுக்குப் போகணும்னு இத்தனை நாளா சொல்லிட்டிருந்தவர், இப்போ, ‘நூறு நாளும் இங்கே இருப்பேன்’னு என்கிட்டே மகிழ்ச்சியா சொன்னார். இவ்வளவு தூரம் கான்ஃபிடென்டா அவர் பேசுறது, நல்ல மாற்றம்தான். முன்னாடியெல்லாம் யார்கூடவும் சரியா பேச மாட்டார். அடிகடி கோபப்படுவார். இப்போ எல்லோரோடும் அன்பும் பாசமும் காட்டும் வையாபுரியா மாறியிருக்கார். இந்த மாற்றத்துக்காக நானும் பிள்ளைங்களும் காத்திருந்த காலங்கள் பல வருஷம். ‘பிக் பாஸ்’ வீட்டில் டாஸ்க் செய்யவும் முடியாமல், எங்களையும் பிரிஞ்சு இருக்காரே, சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வரணும்னு நானும் நினைச்சுகிட்டே இருப்பேன். ஆனா, இப்போ அவர் ரொம்பவே உற்சாகமாகவும் தைரியமாகவும் இருக்கிறதால், நூறு நாள்கள் இருந்து கம்ப்ளிட் பண்ணணும்னு வேண்டிக்கிறேன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில நடக்கிறதெல்லாம் உண்மையா? விளம்பரத்துக்காக செய்வாங்களோன்னுகூட பலரும் எங்கிட்டயே கேட்பாங்க. உண்மை என்னன்னு எனக்கும் தெரியாமதான் இருந்துச்சு. ஆனா, ரெண்டு நாளைக்கு முன்பு அந்த வீட்டுக்குள்ள போனதுல, அங்க நடக்கிறதெல்லாம் உண்மைதான்; நடக்கிற நிகழ்வுகளை நமக்கு அப்படியே காட்டுறாங்க என்பதைக் கண்கூடப் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். குறிப்பா, வெற்றி, தோல்வி பற்றி அவரும் சரி, நானும் சரி கவலைப்படலை. சக மனிதர்களிடம் அன்பு காட்டணும். அந்த அன்புதான் நமக்கு உறவுகளையும் நண்பர்களையும் கொடுக்கும்ங்கிறதை அவர் உணர ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உதவியிருக்கு. அதுதான் முக்கியம்” என நெகிழ்கிறார் ஆனந்தி.